வடக்கு மத்திய ரயில்வேயிக்கு சொந்தமான பணிமனைகளில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப் பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: RRC/NCR/ Act.Apprentice 01/2026
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 1853
வயது வரம்பு: 7.7.2026 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். ரயில்வே விதிமுறைப்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcpryi.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். அதற்கு முன்னர் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் ஐடிஐ தகுதியை பதிவுசெய்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Apprenticeship Opportunities...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அட்டகாசமான வாய்ப்பு... உதவித்தொகையுடன் எச்பிசிஎல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

இஸ்ரோவில் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்; காலியிடங்கள்: 95

தெற்கு ரயில்வேயில் ரூ. 2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி! என்னென்ன?

உதவித்தொகையுடன் ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




