மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) 'பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையம்' நேரடி ஆள்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ள பின்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டக் குழு மற்றும் பிரதமரின் முறையான ஒப்புதலுக்கு பின்னர், 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தில்லியில் பல்கலைக்கழக மானியக் குழுவால்(யுஜிசி) அணு அறிவியல் மையம் என்ற பெயரில் முதல் 'பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையம் நிறுவப்பட்டது.
தேசிய ஆய்வு மையமான இந்த முடுக்கி மையம், பல்கலைக்கழக அமைப்புக்குள் சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அணு அறிவியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாகும். இது பல்கலைக்கழக அமைப்புகளுக்குள் ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக மிகவும் சிறப்பான பங்கை ஆற்றி வருகிறது.
இந்த மையத்தில் நேரடி ஆள்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ள குரூப் 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான அறிவியலாளர், இளநிலை பொறியாளர், நூலக உதவியாளர் என மொத்தம் 8 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 06/2026
பணி: அறிவியலாளர்(Scientist- C)
காலியிடங்கள்: 5,
பணி: இளநிலை பொறியாளர்(Junior Engineer- C)
காலியிடங்கள்: 2
பணி: நுாலக உதவியாளர்(Library Assistant- C)
காலியிடங்கள்: 1
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் முதுநிலைப் பட்டம், பொறியியல் துறையில் எலக்ட்ரானிகஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம், பி.எஸ்சி. மற்றும் பி.எல்ஐபி பட்டங்களுடன், கணினிமயமாக்கப்பட்ட நூலகத்தை நிர்வகிக்கும் துறையில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 4.8.2026 தேதியின் படி 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: iuac.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: அறிவியலாளர் பணிக்கு விண்ணப்போர் ரூ. 1000, இளநிலை பொறியாளர், நுாலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ. 500 மற்றும் ரூ.250, கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IUAC invites applications from qualified Indian Nationals for the following positions on Direct Recruitment basis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டு வேலை, உயா்கல்விக்கான சான்றொப்பம் பெற ஓஎம்சிஎல் அழைப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

நாகையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணி: காலியிடங்கள் 1,450
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்




