ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

கர்நாடகத்தில் ஜன நாயகனுக்கு வந்த புது பிரச்னை! திரையரங்கு காட்சிகள் ரத்து

கர்நாடகத்தில் காவிரி பிரச்னையால் ஜன நாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

ஜன நாயகன் போஸ்டர். - x

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:50 am IST

தணிக்கைச் சான்றிதழ், இணையத்தில் கசிவு, வெளியாவதில் சிக்கல் என பல பிரச்னைகளைக் கடந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியான ஜன நாயகனுக்கு, கர்நாடகத்தில் புது பிரச்னை கிளம்பியிருக்கிறது.

பெங்களுரில் கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தியதால், பல திரையரங்குகளில் ஜன நாயகன் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அங்கு ஸ்பைடர் மேன் படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை பூர்ணிமா, ஊர்வசி திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். கர்நாடகம்- தமிழ்நாடு இடையே காவிரி பிரச்னை பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், அந்த திரையரங்குகளில் ஜன நாயகன் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டு ஸ்பைடர் மேன் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய் கட்-அவுட்களும் அகற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜன நாயகன் திரைப்படம் வெளியானது முதலே கர்நாடகத்தில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில மாண்டியாவில் திரையரங்குகளில் போராட்டம் நடத்தப்பட்டு படம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

Summary

new problem for Jananayagan in Karnataka Screenings cancelled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.