FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஜனநாயகன் படத்தில் முதல்வராக வருவாரா விஜய்? கிளிம்ஸ் காட்சிகள் வெளியீடு!

ஜனநாயகன் கிளிம்ஸ் விடியோவில், கோட் சூட் அணிந்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது குறித்து...

News image

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து... - எக்ஸ்

Updated On :20 ஜூலை 2026, 6:08 pm IST

ஜனநாயகன் திரைப்படத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தோன்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஜனநாயகன் கிளிம்ஸ் காட்சிகளில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கோட் சூட் அணிந்தவாறு தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்களில் முதல்வர் விஜய் பகிர்ந்துள்ளார்.

அந்த கிளிம்ஸ் விடியோவில் தளபதி வெற்றி கொண்டான் பாத்திரமும் முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கோட் சூட் அணிந்தவாறு நின்றுக்கொண்டிருக்கும் காட்சியும் மாறி மாறி இடம்பெற்றுள்ளது.

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து...

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து... - எக்ஸ்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது. முன்பதிவில் மட்டும் இதுவரை (ஜூலை 20, மாலை 6 மணி) ரூ. 10 கோடி வசூலித்துள்ளது.

Summary

Will Chief Minister Vijay appear in the movie Jananayagan? Glimpse visuals released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.