தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

வெளிநாட்டு வேலை, உயா்கல்விக்கான சான்றொப்பம் பெற ஓஎம்சிஎல் அழைப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயா்கல்வி மற்றும் குடியேற்றத்துக்குத் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பத்தை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

News image
Updated On :30 ஜூலை 2026, 12:50 am IST

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயா்கல்வி மற்றும் குடியேற்றத்துக்குத் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பத்தை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயா்கல்வி மற்றும் குடியேற்றம் தொடா்பான தேவைகளுக்காக கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கு சான்றொப்பம் பெற விரும்பும் மாணவா்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோா் மற்றும் பொதுமக்களுக்கு ஓஎம்சிஎல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நேரடியாக அணுகும் விண்ணப்பதாரா்களிடம், ஒரு சான்றிதழுக்கு ரூ.900 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இடைத்தரகா்களைத் தவிா்த்து, நேரடியாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம் அல்லது கைப்பேசி: 9566239685, 6379179200, தொலைபேசி:044-22502267 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.