புது தில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்கவும் கல்விச் சீர்திருத்தங்கள் கோரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், அவர்களின் துணிச்சலுக்கு "கோழைத்தனம் மற்றும் அப்பட்டமான கொடூரத்துடன்" பதிலளித்துள்ள மோடி அரசு, அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல் "தேச விரோதிகளாக" நடத்துவதாக மோடி அரசுக்கு எதிராக கடுமையாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா, மாணவர்களின் நியாயமான குரலை ஒடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை நாளிதழ் ஒன்றுக்கு எழுதியிருக்கும் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:
இன்றைய நம்பிக்கையற்ற கல்விச் சூழல் மற்றும் மோடி அரசின் இயல்பான ஆணவம், பொறுப்புக்கூறாமை அல்லது ஆக்கபூர்வமாகச் செயல்படாத மனப்பான்மை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பின் இயல்பான விளைவே இந்த மாணவர் போராட்டங்கள்.
மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறையினர் தில்லியில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட 'கொடூரமான தாக்குதல்' இந்த ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல.
2020-ல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான போராட்டங்களின்போது, ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் துணை ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை நாம் மறந்திருக்க முடியாது.
அதேபோன்று நாட்டின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களும் நம் நினைவிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டின் கல்விச் சூழலை அரசு சீரழித்து வருவதாகக் குற்றம் சாட்டிய சோனியா, மோடி ஆட்சியின் உண்மை முகத்தை மாணவர்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.
உணர்வற்ற தன்மை
மோடி அரசு நாட்டின் கல்விச் சூழலைச் சீரழித்தது மட்டுமல்லாமல், "முழுமையான பொறுப்புக்கூறாமை, அதீத சுய-மாயை மற்றும் கடும் உணர்வற்ற தன்மை" ஆகியவற்றுடன் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பு ரீதியான கடமை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் அமைதியான போராட்டங்கள் சமீப வாரங்களில் வலுப்பெற்று வருவதை சுட்டிக்காட்டிய சோனியா, மாணவர்களுடன் துணை நிற்பதும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கடமை என்று அவர் வலியுறுத்தினார்.
கறைபடிந்த நாள்
2026 ஜூலை 20 ஆம் தேதி ஒரு 'கறைபடிந்த நாள்' என்று கூறிய சோனியை, தில்லி காவல்துறையும் மத்திய ஆயுதப்படை காவலர்களும் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி வன்முறை மூலம் மாணவர்களை ஒடுக்க முயன்றனர்.
காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடியை நடத்தியதால், அமைதியான முறையில் போராடிய பலர் காயமடைந்தனர் என்றும், வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் கூட அவர்களுடைய தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்றும் காந்தி குறிப்பிட்டார்.
அமித் ஷா ஒப்புதல்
"பெல்லட் குண்டுகளால் பலத்த காயமடைந்த இளைஞர்களின் மிகவும் மனவேதனைக்குரிய காட்சிகளை நாடு கண்டுள்ளது; இத்தகைய குண்டுகளின் பயன்பாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே ஒப்புதல் அளித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அன்றைய நாளின் காணொளிகள் மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ளன; அவை மக்களின் கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளன.
தன்னிச்சையாக எழுந்த இந்தப் போராட்ட அலையைச் சுற்றி, அரசாங்கமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் மட்டுமே தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
போராடுபவர்கள் நம்முடைய பிள்ளைகள்
இப்போது உரத்த குரலில் சொல்ல வேண்டிய நேரம் இது. அமைதியான வழியில் போராடுபவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துங்கள், அவர்கள் நம்முடைய மகன்கள் மற்றும் மகள்கள், நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்று சோனியா கூறினார்.
பேச்சுவார்த்தைக்குப் பதிலாக வன்முறையைத் தேர்ந்தெடுப்பதை மோடி அரசாங்கம் வழக்கமாகக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சோனியா, விவசாயிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரிடமும் இந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிகிறது என்றார்.
தரம் தாழ்ந்துவிட்டது
ஆனால் இந்த வாரம், சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ள இந்த உணர்வற்ற அரசாங்கம், மிக மோசமான நிலைக்குத் தரம் தாழ்ந்துவிட்டது.
எதிர்கால மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் தேசத்தை உருவாக்குபவர்களிடம் புரிதலுடன் அணுகுவதற்குப் பதிலாக, அவர்கள் மீது அரசின் ஒடுக்குமுறை அதிகாரத்தை அது ஏவிவிட்டது.
இதை மன்னிக்கவோ அல்லது மறக்கவோ முடியாது என்று சோனியா கூறினார்.
மாற்றுக்கருத்து கொண்டவர்கள் தேச விரோதிகள்
மாற்றுக்கருத்து கொண்டவர்களை 'தேச விரோதிகள்' என்று முத்திரை குத்தும் அரசாங்கத்தின் பழைய உத்தி, மாணவர்களின் போராட்டங்களைச் சிதைப்பதற்காக மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
போராட்டங்களுக்குக் காரணமான தனது கொள்கைகள் குறித்து சுயபரிசோதனை செய்திருக்க வேண்டிய நிலையில், அவதூறுகளைப் பரப்பவும் சதித்திட்டக் கதைகளை உருவாக்கவும் மோடி அரசாங்கம் தனது தந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது.
பொதுக் கல்வியிலிருந்து மோடி அரசாங்கம் பின்வாங்கியதே முதல் அடிப்படைப் பிரச்னை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடல்
பள்ளி கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 50 சதவீதமும், உயர்கல்விக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதமும் அது குறைத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், "இத்தகைய அபத்தமான பின்வாங்கலில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? கடந்த 12 ஆண்டுகளில், மோடி அரசு ஏறக்குறைய ஒரு லட்சம் அரசுப் பள்ளிகளை மூடியுள்ளது; அதேவேளையில் 43 ஆயிரம் தனியார் பள்ளிகள் திறந்துள்ளது. இதில் கணிசமான எண்ணிக்கையிலான பள்ளிகள் 'ஆர்எஸ்எஸ்' அமைப்பால் நடத்தப்படுகின்றன; அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் இணைந்துதான் நாட்டில் மிகப்பெரிய தனியார் பள்ளி வலையமைப்பை நிர்வகித்து வருகின்றன," என்று அவர் கூறினார்.
தரமான மற்றும் மலிவு விலையிலான பொதுக் கல்வி கிடைக்காத சூழலில், தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக சோனியா குறிப்பிட்டார்.
நாட்டின் எதிரிகளாகவே நடத்துகிறது
மேலும், மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை. மோடி அரசிடம் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனுத்துடனும் அப்பட்டமாக அவமதிக்கும் நோக்கத்துடனேயே பதிலளித்துள்ளது; அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ள சோனியா,
பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்
தேரிய தேர்வு முகமை(என்டிஏ) சரியான முறையில் நிர்வகிக்கப்படாமல், முறையான பொறுப்புக்கூறல் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில், கல்வித்துறையில் தொடர் தோல்விகளுக்கும் வினாத்தாள் கசிவுகளுக்கும் பொறுப்பேற்காமல் அரசு நழுவும் மோடி அரசு, மாணவர்களுடன் மோதும் போக்கைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான குரலை ஒடுக்காமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Summary
the Modi government has responded to their courage with "cowardice and wanton cruelty, treating them not as inheritors of the future but as enemies of the nation"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா: இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை

3 நாடுகளுக்கு பயணம்! பிரதமர் மோடி புறப்பட்டார்!

'பிரதமர் மோடி தூங்க மாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay




