/

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்: ராகுல் காந்தி காட்டம்

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் என ராகுல்காந்தி வலியுறுத்தியிருப்பது குறித்து...

News image

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்: ராகுல் காந்தி - பிடிஐ / எக்ஸ்

Updated On :24 ஜூலை 2026, 10:12 am IST

தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள், மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்றும் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என பிரதமர் செல்ஃபி விடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்

இந்த நிலையில், நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் எனவும், மாணவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சரின் பதிவி நீக்கம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பிரதமர் மோடி அவர்களே, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்.

மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை

1. தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.

2. மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்காமல், அவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சரின் பதிவி நீக்கம் என ராகுல் கூறியுள்ளார்.

Summary

Don’t insult their intelligence with this pathetic midnight video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.