அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

'பிரதமர் மோடி தூங்க மாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூக்கம் பற்றி அதிபர் டிரம்ப் கூறியது குறித்து..

News image

பிரதமர் மோடி - டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:16 pm IST

பிரதமர் நரேந்திர மோடி தூங்கமாட்டார், தன்னைப்போன்று அதிகாலை எழுந்துகொள்வார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நினைவுகூர்ந்துள்ளார்.

வாஷிங்டன்னில் நடைபெற்ற அமெரிக்க - இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்ற உச்சிமாநாட்டின் போது, பிரதமர் மோடி குறித்து டிரம்ப் கூறியதைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது:

''இரு மாதங்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப் உடன் மியாமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். உடனே அவர் பிரதமர் மோடிக்கு அழைக்குமாறு என்னிடம் கூறினார். சற்று தயங்கிய நான், இந்தியாவில் தற்போது காலை 6 மணி எனக் குறிப்பிட்டேன்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், பிரதமர் மோடி தூங்கவே மாட்டார். அவர் எழுந்துகொண்டிருப்பார். அவர் என்னைப் போன்றவர் என டிரம்ப் சொன்னார்'' என செர்ஜியோ தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ''இதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உண்மையாகவே ஒருவருடன் நீங்கள் நட்பு பாராட்டினால் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. பிரதமர் மோடி அதற்குth தகுதியான நபராக இருந்தார்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான பொதுவான விஷயங்கள் நிறைய உள்ளன. அவை நீடித்த வளர்ச்சியை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

செய்யறிவு (ஏஐ), தொழில்நுட்பம், விமானத் துறை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் இணைந்து செயல்படுவதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைத் தரும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

President Trump said PM Modi doesn't sleep US envoy Sergio Gor recalls early morning call

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.