கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியது. சில நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சில இடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வாகமன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வைக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் நாயர் என்பவர் பலியானார்.
இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டு, காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையடுத்து, கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A red alert has been issued for five districts in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! களத்தில் 50 பேரிடர் மீட்புக் குழுக்கள்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக முறை ரெட் கார்ட்: ஆர்ஜென்டீனா அணியின் மோசமான சாதனை!

தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!

கனமழை எச்சரிக்கை... புணேயில் இன்று(ஜூலை 6) பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!




