உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா அணியை 0-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா வீரர் என்சோ பெர்னாண்டஸ் 93-வது நிமிடத்தில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதன்மூலம், இறுதிப்போட்டிகளில் அதிகமுறை ரெட் கார்ட் வாங்கிய அணியாக மோசமான சாதனையை ஆர்ஜென்டீனா படைத்துள்ளது.
ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா இறுதிப்போட்டி:
முதல் மஞ்சள் அட்டை
போட்டியின் 82-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா வீரர் என்சோ பெர்னாண்டஸ் ஸ்பெயின் வீரரிடம் பந்தைத் தடுத்து வாங்க முற்பட்டபோது கீழே விழுந்தார். அதற்கு ஃப்ரீ - கிக் வாய்ப்பு கிடைக்குமென அவர் கைகளை உயர்த்தி கோரிக்கை வைத்ததை நடுவர் நிராகரித்தார். உடனடியாக, நடுவரைப் பார்த்துக் கைகளால் சைகை செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு நடுவர் முதல் மஞ்சள் அட்டையைக் காட்டினார்.
ஃபிஃபா விதிகளின்படி, நடுவரின் முடிவுக்கு வாய்மொழியாகவோ, சைகையிலோ எதிர்ப்புத் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட வீரர் விதிகளை மீறியதாகக் கருதப்படும்.
இரண்டாவது மஞ்சள் அட்டை
90 நிமிடங்கள் கடந்து, கூடுதல் நேரம் தொடங்கி 3 நிமிடங்களில் ஸ்பெயின் தடுப்பாட்ட வீரர் பாவ் குபார்சி பந்தைத் தடுக்க வந்தபோது, என்சோ பெர்னாண்டஸ் ஓடிவந்து அவர் மீது பலமாக மோதினார். இதில், சுற்றியபடி பாவ் குபார்சி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
சிவப்பு அட்டை (ரெட் கார்ட்)
விதிப்படி இரண்டு முறை மஞ்சள் அட்டைகளைப் பெற்றால் அது சிவப்பு அட்டை (ரெட் கார்ட்) பெற்றதாகக் கருதப்பட்டு, குறிப்பிட்ட வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
இதன் காரணமாக, என்சோ பெர்னாண்டஸ் வெளியேறியதால் ஆர்ஜென்டீனா அணி 10 வீரர்களுடன் போட்டியை மேற்கொண்டு விளையாடியது. இந்த சாதகத்தைப் பயன்படுத்தி ஸ்பெயின் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 0-1 என்ற கணக்கில் வென்றது.
இதனைத் தொடர்ந்து, ஆர்ஜென்டீனா அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இதுவரை பெற்ற ரெட் கார்ட் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனால், ஆர்ஜென்டீனா இந்த மோசமான சாதனையில் முதலிடத்தில் உள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரெட் கார்ட் வாங்கிய அணிகள்:
1990: பெட்ரோ மோன்சோன் (அர்ஜென்டினா) மற்றும் குஸ்டாவோ டெசோட்டி (அர்ஜென்டினா)
1998: மார்செல் டெசாய்லி (பிரான்ஸ்)
2006: ஜினடின் ஜிதேனே (பிரான்ஸ்)
2010: ஜான் ஹெய்டிங்கா (நெதர்லாந்து)
2026: என்சோ பெர்னாண்டஸ் (அர்ஜென்டினா)
Summary
Most red cards in World Cup finals: Argentina's unwanted record!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா வீரர்கள் மோதல்: ஃபிஃபா விசாரணை!

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!

மெஸ்ஸி - பலோகன் ரெட் கார்டு விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!







