கால்பந்து உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு விவகாரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஃபௌல் (தவறு) செய்வார். இதுவும் அமெரிக்க வீரர் செய்ததுபோலவே இருப்பதால், மெஸ்ஸிக்கு ஏன் ரெட் கார்டு வழங்கப்படவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அமெரிக்க அணி போஸ்னியா - ஹெர்சகோவினா அணியை 2-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் 64ஆவது நிமிஷத்தில் எதிரணி வீரர் தாரிக் முஹரெமோவிச்சின் முழங்காலில் பலோகனின் கால் பட்டதால் அவர் கீழே விழ, விஏஆர் மூலம் பலோகனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
கிட்டதட்ட இதேபோல அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு ஃபௌல் (தவறு) செய்திருப்பார். இதற்கு ஏன் ரெட் கார்டு வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதே உலகக் கோப்பையில் மெஸ்ஸிக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதேபோல் நடந்திருந்தும் ரெட் கார்டு எதுவும் வழங்கப்படவில்லை இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.
ஃபிஃபாவின் விதியின்படி ஒரு வீரர் வேண்டுமென்றே செய்யும்போது மட்டுமே ரெட் கார்டு வழங்கப்படுகிறது. அமெரிக்க வீரர் வேண்டுமென்றே செய்யவில்லை என அதன் பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார்.
கோல் அடித்து ரெட் கார்டு வாங்கி வெளியேறிய வரலாற்றில் இடம்பிடித்த பலோகன் அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Summary
Red card controversy: One rule for Messi, another for Balogun? Fans are up in arms!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










