கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்க வீரர் பலோகனுக்கு ரெட் கார்டு திரும்பப் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஃபிஃபாவின் நேர்மையை கேள்விக்குள்ளாகுவதாக இருக்கிறதென பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அமெரிக்க அணி போஸ்னியா - ஹெர்சகோவினா அணியை 2-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் கோல் அடித்த அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு அடுத்த சில நிமிஷங்களில் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பின்னர், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடன் தொலைபேசியில் பேசினார். பின்னர், ஃபிஃபா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பலோகன் விளையாட அனுமதி அளித்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் 1962க்கு பின்பாக முதல்முறையாக இதுமாதிரி நடைபெற்றுள்ளது. ஜியானி இன்ஃபான்டினோ டிரம்ப் உடன் நெருக்கமாக இருப்பதாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்து கழகம் யுஒஎஃப்ஏ, “ ரெட் கார்டு விதி மீறப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான நடவடிக்கை. முன்னெப்போதும் இல்லாத, புரிந்துகொள்ள முடியாத மற்றும் நியாயப்படுத்த முடியாத தீர்ப்பு. ஃபிஃபா மீதான நம்பகத்தன்மனையும் போட்டி மீதான நேர்மையும் கேள்விக்குள்ளாக்கப்படும் ” எனக் கூறியுள்ளது.
இது குறித்து பெல்ஜியம் அணி மேல்முறையீடு செய்தது. ஆனால், போட்டிக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக செய்திருக்க வேண்டுமென ஃபிஃபா தெரிவித்தது.
ரெட் கார்டு விதியை நீக்கிய ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குழு பலோகனுக்கு 40,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்க்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “இது ஃபௌல் (தவறு) மாதிரி எனக்குத் தெரியவில்லை. இரு வீரர்கள் தீவிரமாக ஓடிவரும்போது இப்படி நடந்துவிட்டது. நான் இது குறித்து ஆய்வு செய்ய முடியுமா என்றுதான் இன்ஃபான்டினோவுடன் கேட்டேன். இதைச் செய்தே ஆக வேண்டுமென நான் கூறவில்லை” என்றார்.
இது குறித்து இன்ஃபான்டினோ, “ஃபிஃபா நடுவர் மன்றம் என்பது தன்னிச்சையானது. அவர்கள் சுயமாக முடிவெடுப்பவர்கள்” என்றார். இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி அமெரிக்காவை 4-1 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Integrity of World Cup is questioned as Trump, FIFA defend actions surrounding Balogun suspension
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!

மெஸ்ஸி - பலோகன் ரெட் கார்டு விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

கோல் - ரெட் கார்டு வரலாற்றில் இடம்பிடித்த பலோகன்..! போஸ்னியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




