பிரான்ஸ் கால்பந்து வீரர் கிளியன் எம்பாபே தன்னைக் குறித்து அநாகரிகமாக பதிவிட்ட பராகுவே செனட்டருக்கு, “ தகுதியே இல்லாத இழிவான பெண்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை பிரான்ஸ் அணி 1-0 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் பலமுறை மோதிக்கொண்டார்கள். குறிப்பாக எம்பாவே உடன் பலரும் மோதலில் ஈடுபட்டார்கள்.
இந்தப் போட்டிக்குப் பிறகு எம்பாபேவை ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என்றும் அவரது நிறம், குணம் என அனைத்தையும் விமர்சித்து பராகுவே செனட்டர் செலஸ்டே அமரில்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவர் பதிவை நீக்கியுள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் வீரர் எம்பாபே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மேடம் செலஸ்டே அமரில்லா, நீங்கள் ஒரு இழிவான பெண் மற்றும் உங்களது பதவிக்கு தகுதியில்லாதவர். நீங்கள் பராகுவேவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அந்த அணி இந்த உலகக் கோப்பையில் இனிமையான ஆர்வத்துடன் கௌரமாக விளையாடினார்கள்.
உங்களது பொறுப்பற்ற தன்மை, இனவெறி மூலம் தங்களது அணி வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் இதுவரை பயணித்ததை இந்த உலகம் மறந்துவிட்டது. தகுதியற்ற ஒரு பெண்ணால் ஒரு நாட்டிற்கே மோசமான பிம்பம் கிடைத்துவிட்டது.
உலகம் முழுவதும் வெறுப்பையும் இனவெறி ரீதியான தாக்குதலையும் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்பும் மனிதர்களை நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து அமைப்பு, “இதுபோல் எப்படி ஒரு செனட்டர் பேச முடியும்? இது குற்றவியல் வழக்கு போன்றது. இதற்காக வழக்குத் தொடுக்க நாங்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் கொடுக்கிறோம்” எனக் கூறியுள்ளது.
Summary
A completely unworthy, despicable woman... Mbappe hits back at the Paraguayan senator!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











