பிரான்ஸ் கால்பந்து வீரர் கிளியன் எம்பாபே இந்த உலகக் கோப்பையில் மட்டுமே 6 கோல்கள் அடித்து ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் சமன்செய்துள்ளார்.
ஸ்வீடனுக்கு எதிராக இன்று ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் விளையாடிய பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பிரான்ஸ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் கிளியன் எம்பாபே (45’, 74’) 2 கோல்கள் அடித்து அசத்தினார். இத்துடன் இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்துள்ள எம்பாபே மொத்தமாக உலகக் கோப்பையில் 18 கோல்கள் அடித்து மிரட்டியுள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி 19 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். குறைந்த வயதான எம்பாபே அதற்குள்ளாக 18 கோல்களுடன் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தமிழில் பதிவிட்ட ஃபிஃபா! - படம்: இன்ஸ்டா / ஃபிஃபா உலகக் கோப்பை.
இதுவரை 18 முறை உலகக் கோப்பையில் அறிமுகமாகியுள்ள எம்பாபே 18 கோல்கள் அடித்துள்ளார்.
ஃபிஃபா கால்பந்து தனது எக்ஸ் பக்கத்தில் எம்பாபே எனக் குறிப்பிட்டு அவர் அடித்த கோல் பாணியிலேயே ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஃபிஃபா தமிழில், “என் வழி தனி வழி” என நடிகர் ரஜினியின் வசனத்தைக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு கில்லி என்றும் மெஸ்ஸிக்கு தல என்றும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Mbappe close to Messi's record..! FIFA posts in Tamil!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள்: உலக சாதனை படைத்த பிரான்ஸ் பயிற்சியாளர்!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

கால்பந்து உலகக் கோப்பை: மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS




