எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி படைத்த சாதனை குறித்து...

News image

லியோனல் மெஸ்ஸி - படம்: ஏபி

Updated On :12 ஜூலை 2026, 4:22 pm IST

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட்ஸ் (கோல் அடிக்க உதவி புரிதல்) செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கான்சாஸ் சிட்டியில் ஸ்விட்சர்லாந்துடன் காலிறுதியில் மோதிய ஆர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 10ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் அசத்தலான அசிஸ்ட் செய்தார். இந்தப் பந்தை மெக் அலிஸ்டர் கோலாக மாற்றினார்.

நடப்பு உலகக் கோப்பையில் மெஸ்ஸி 8 கோல்கள் அடித்து எம்பாபே உடன் முதலிடத்தில் சமனிலையில் இருக்கிறார். அசிஸ்ட்டில் மைக்கேல் ஒலிஸே (5) முதலிடத்தில் இருக்க, மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுடன் 12ஆவது இடத்தில் இருக்கிறார்.

மொத்தமாக, உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி அதிக கோல்கள் (21), அதிக அசிஸ்ட்டுகள் (10) உடன் வரலாறு படைத்துள்ளார். இதுவரை யாரும் இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக்க கோப்பையில் அதிக அசிஸ்ட்டுகள்

1. லியோனல் மெஸ்ஸி - 10

2. மாரடோனா - 8

3. லாடோ - 7

4. லிட்பார்ஸ்கி - 7

Summary

Messi creates new history at the Football World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.