ஃபிஃபா உலகக் கோப்பை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் படத்தின் பாணியிலான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை காலிறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை விழ்த்தி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்கம் 45+2, 93ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
சிறப்பாக விளையாடிய ஜூட் பெல்லிங்கமிற்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் ஃபிஃபா உலகக் கோப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறப்புப் போஸ்டரை பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில் தமிழக முதல்வரும் முன்னாள் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பாணியில் ஜூட் நாயகன் எனப் பதிவிட்டு, போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

ஜூட் பெல்லிங்கம் சிறப்புப் போஸ்டர். - ஃபிஃபா உலகக் கோப்பை
நடிகராக விஜய் தனது கடைசி படமாக ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடித்துள்ளார்கள். சமீபத்தில் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஃபிஃபா உலகக் கோப்பை தமிழ் போஸ்டர்களை அடிக்கடி வெளியிட்டுள்ளது. முன்னதாக வினிசியஸ் ஜூனியருக்கு கில்லி எனவும் எம்பாப்வேவிற்கு என் வழி தனி வழி எனவும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Jude Bellingham as 'Jude Nayagan' in 'Jana Nayagan' style! Poster released by FIFA.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... ஃபிஃபா தரவரிசை டாப்4ல் இருக்கும் 4 அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு!
ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!








