ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பல சாதனைகளுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார் மெஸ்ஸி!

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

Leo Messi

லியோனல் மெஸ்ஸி. - படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :4 ஜூலை 2026, 12:10 pm IST

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

அமெரிக்காவின் இண்டர் மியாமி திடலில், இந்திய நேரப்படி காலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 29ஆவது நிமிஷத்தில் லியோனல் மெஸ்ஸி அசத்தலான் கோல் அடித்தார். பின்னர், கூடுதல் நேரத்தில் கார்னர் கிக் மூலம் ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

இந்தப் போட்டியில் 3-2 என ஆர்ஜென்டீனா போராடி வென்றது. இதில் சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

1. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

2. உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (20) அடித்தவராக மெஸ்ஸி தனது சாதனையை நீட்டித்துள்ளார்.

3. நடப்பு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (7) அடித்தவராகவும் சாதனை படைத்துள்ளார்.

4. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அசிஸ்ட்டுகள் (9) செய்து வரலாறு படைத்துள்ளார்.

Summary

Messi won the Man of the Match award along with several records!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.