ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டம்: கேப் வெர்டேவை போராடி வென்றது ஆர்ஜென்டீனா!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய ஆர்ஜென்டீனா குறித்து...

Argentina's Lionel Messi, middle, and teammates celebrate after the World Cup round of 32 soccer match between Argentina and Cape Verde in Miami Gardens, Fla., Friday, July 3, 2026. (AP Photo/Chris Carlson)

வெற்றிக் களிப்பில் ஆர்ஜென்டீன அணியினர். - படம்: ஏபி

Published On :4 ஜூலை 2026, 11:16 am IST

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கேப் வெர்டே அணியை வீழ்த்தியது.

கூடுதல் நேரத்துக்குச் சென்ற இந்தப் போட்டியில் 111ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் மெஸ்ஸி அடித்த பந்து ரொமாரியோ தலையில் பட்டு எதிரணியின் டிஃபெண்டர் கையில் பட்டு கோல் ஆனது. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா போராடி வென்றது.

அமெரிக்காவின் இண்டர் மியாமி திடலில், இந்திய நேரப்படி காலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 29ஆவது நிமிஷத்தில் லியோனல் மெஸ்ஸி அசத்தலான் கோல் அடித்தார். அடுத்து 59ஆவது நிமிஷத்தில் எதிரணியின் டெராய் டுவார்டே இதனை சமன்படுத்தினார்.

ஸ்டாப்பேஜ் நேரம் முடிந்து, கூடுதல் நேரத்தில் ஆர்ஜென்டீனாவின் லிசான்ட்ரோ மார்டினெஸ் 92ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, 103ஆவது நிமிஷத்தில் சிட்னி லோப்ஸ் கப்ரால் அதனை 2-2 என சமன்படுத்தினார்.

கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் 111ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் மெஸ்ஸி அடித்த பந்து ரொமாரியோ தலையில் பட்டு எதிரணியின் டிஃபெண்டர் கையில் பட்டு கோல் ஆனது. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா போராடி வென்றது.

கேப் வெர்டே அணி நடப்பு சாம்பியனுக்கு எளிதான வெற்றியைத் தரவில்லை. ஆர்ஜென்டீனா அணி சற்று அசந்திருந்தால் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றிருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Messi, Argentina beat Cape Verde 3-2 in extra time thriller, advancing to World Cup Round of 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.