வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பெனால்டியில் கோல் அடித்த மெஸ்ஸி: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

உலகக் கோப்பைக்கு முன்பான ஆட்டத்தில் வென்ற ஆர்ஜென்டீனா குறித்து...

News image

மெஸ்ஸி. - ஏபி

Updated On :10 ஜூன் 2026, 4:56 pm IST

கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்பான நட்புரீதியான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா ஐஸ்லாந்துடன் மோதியது. இந்தப் போட்டியில் 3-0 என நடப்பு சாம்பியன் வென்றது.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கிறது.

16 நாள்கள் காயத்திலிருந்து மீண்ட லியோனல் மெஸ்ஸி ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் 69ஆவது நிமிஷத்தில் களமிறங்கினார். 72ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து அசத்த இறுதியில் 3-0 என வென்றது.

உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா தனது முதல் போட்டியில் ஜூன் 16ஆம் தேதி அல்ஜீரியாவுடன் மோதுகிறது.

குரூப் ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டீனா அணி அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் ஆகிய அணிகளுடன் மோதவிருக்கிறது.

Summary

Lionel Messi scores in return as Argentina look to World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.