ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விட 87 மடங்கு அதிகமானப் பரிசுத் தொகையுடன் ஃபிஃபா உலகக் கோப்பை அறிமுகமாகியிருக்கிறது.
நடப்பு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கவிருக்கிறது. மேலும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் முதல்முறையாக நடைபெறுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Summary
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 கோடி) மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது.
கால்பந்து உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 478.50 கோடி) கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிக்கே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.109.7 கோடி) வழங்கப்படும். இது ஐசிசி உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பை வெற்றியாளர் (50 மில்லியன் டாலர்), கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியாளரை (4 மில்லியன் டாலர்) விட 12.5 மடங்கு அதிகமான தொகையைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பையின் பரிசு விவரங்கள்:
சாம்பியன் - 50 மில்லியன் டாலர்
ரன்னர் அப் - 33 மில்லியன் டாலர்
மூன்றாமிடம் - 29 மில்லியன் டாலர்
நான்காமிடம் - 27 மில்லியன் டாலர்
5-8ஆவது இடம் - 19 மில்லியன் டாலர்
9-16ஆவது இடம் - 15 மில்லியன் டாலர்
17-32ஆவது இடம் - 15 மில்லியன் டாலர்
33-48ஆவது இடம் - 9 மில்லியன் டாலர்
இந்தத் தொகை இல்லாமல் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பயிற்சிக்காக ஒவ்வொரு அணிக்கும் ஃபிஃபா வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
FIFA world cup record breaking USD 871 million, icc is only USD 10 Million
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஃபிஃபா உலகக் கோப்பை: விற்பனைக்கு வரும் திடலின் புற்கள்! என்ன விலை தெரியுமா?

அதிக கோல்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த 2026 உலகக் கோப்பை!
உலகக் கோப்பை தோல்வி! குரோஷிய அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா!
பிஃபாவின் வரலாறு... 1930 ரீவைண்ட்! கால்பந்து திருவிழாவின் தொடக்கம்!!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



