கால்பந்து உலகக் கோப்பை 2026ல் அதிகமான கோல்கள் பதிவுசெய்யப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை விளையாடிய 100 போட்டிகளில் 292 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்றன. தற்போது அரையிறுதிக்கு ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
கால்பந்து உலகக் கோப்பை 1970 முதல் தற்போதுவரை (2026) விளையாடியதில் ஒரு போட்டிகளில் சராசரியாக அதிக கோல்கள் அடித்த எடிஷனாக இந்த உலகக் கோப்பையே முதலிடத்தில் இருக்கிறது.
உலகக் கோப்பை 1970ல் 100 போட்டிகளில் சராசரியாக 2.55 கோல்கள் அடிக்கப்பட்டன. தற்போது, 2026 உலகக் கோப்பையில் 100 போட்டிகளில் சராசரியாக 2.92 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
மிகவும் குறைவான சராசரி (2.21) கோல்கள் பதிவான எடிஷனாக 1990 உலகக் கோப்பை இருக்கிறது. அதிகபட்சமாக 2026 எடிஷனில்தான் 2.92 சராசரியான கோல்கள் பதிவாகியுள்ளன.
இரண்டாவது அதிகபட்ச சராசரி (2.81) கோல்கள் 1982 உலகக் கோப்பையில் பதிவாகியுள்ளன. இந்த உலகக் கோப்பையில் மீதம் 4 போட்டிகள் இருக்கின்றன.
100 matches, 292 goals.
— FIFA World Cup (@FIFAWorldCup) July 14, 2026
This year's editon ranks highest on average goals per game at a #FIFAWorldCup since 1970! pic.twitter.com/aOfg41B1NG
Summary
This years editon ranks highest on average goals per game at a FIFA World Cup since 1970
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக் கோப்பை தோல்வி! குரோஷிய அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா!

கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!

மெஸ்ஸி சாதனைக்கு அருகில் எம்பாபே..! தமிழில் பதிவிட்ட ஃபிஃபா!

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



