நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 3வது மொழிப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்3 என்று கூறப்படும் 3வது மொழிப் பாடத்துக்கு, பள்ளிகள் நடத்தும் உள்நிலைத் தேர்வுகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மூன்றாவது மொழிப் பாடத்திட்டத்துக்கான தேர்வுகள், பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும். 3வது மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 10ம் வகுப்புக்கு முன்னேற்றம் செய்யப்படுவார்கள்.
ஆனால், அதே மாணவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மூன்றாவது மொழிப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.
மேலும் சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறநாளிகளுக்கு 3வது மொழிப் பாடத்தைக் கற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் இந்திய மொழி ஒன்றை 3வது மொழியாக எடுத்துப் படிப்பதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, சிபிஎஸ்இயின் தேர்ச்சி பெற்றோர் என்ற சான்றிதழ் பெறுவதற்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 10-ஆம் வகுப்பில் 3வது மொழித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மறுமதிப்பீட்டிற்கான (re-assessment) வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்மொழிக் கொள்கை! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி - சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா?

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



