எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

மும்மொழிக் கொள்கை! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி - சிபிஎஸ்இ

மும்மொழிக் கொள்கையால்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிக்கல் இல்லை என சிபிஎஸ்இ அறிவிப்பு

News image

சிபிஎஸ்இ - கோப்பிலிருந்து

Updated On :29 ஜூன் 2026, 4:09 pm IST

மும்மொழிக் கொள்கையால் நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கிறது.

நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையால் எந்த பிரச்னையும் இருக்காது. மேலும், தற்போது 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களும், 10ஆம் வகுப்பு பயிலும்போது, பொதுத் தேர்வில் மூன்றாவது மொழியில் பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 7 முதல் 9 வகுப்பு வரை தற்போது படித்து வரும் மாணவா்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் அவா்கள் தற்போது தெரிவு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அனுமதித்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான மாணவா்கள் பலனடைவா் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், அவர்கள் ஏற்கனவே படித்து வரும் இரு மொழிக் கொள்கைப்படியே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.. மூன்றாவது மொழியில் தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7, 8, 9ஆம் வகுப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்ததால், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை தீர்க்கும் வகையில் இந்த விளக்கம் வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.