பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் கேப்டன் லயனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் அல்ஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஃபிபா உலகக்கோப்பைத் தொடரின் 14-வது போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கான்சஸ் சிட்டியில் குரூப் ஜெ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது.
200-வது சர்வதேசப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டீனா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 17-வது நிமிடத்தில் முதல் கோலை போட்டு அசத்தினார்.
முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஆர்ஜென்டீனா, இரண்டாவது பாதியிலும் பந்தைத் தன்பக்கம் வைத்துக் கொண்டது.
தொடர்ந்து 60 நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்ஸி, 76-வது நிமிடத்திலும் கோல் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.
ஆட்டம் நேர முடிந்த பின்னர் கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்டம் முடியும் வரை அல்ஜீரியா அணியால் ஆறுதல் கோல்கூட போட முடியவில்லை.
இதனால், ஆட்டத்தின் இறுதியில் ஆர்ஜென்டீனா அணி அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
Summary
Reigning champions Argentina beat Algeria 3-0 on Tuesday as Lionel Messi equalled Miroslav Klose's all-time record for goals at World Cups when he scored a hat-trick.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









