2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடியதாக ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி ஒப்புக்கொண்டார்.
இந்தத் தோல்வியின் மூலம் ஆர்ஜென்டீனா அணியின் மூன்றாவது கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.
தோல்வி பற்றி பேசிய ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி, “அவர்கள் சிறந்த அணியாகச் செயல்பட்டனர். அதுவே உண்மை. ஆனால் எனது அணியும், அவர்கள் சாதித்ததையும், இவ்வளவு முன்னேறி வந்ததன் மதிப்பைப் பற்றியும் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்” என்று கண்ணீருடன் பேசினார்.
ஆட்டம் முடிந்ததும் அர்ஜென்டினா மிட்ஃபீல்டர் லியாண்ட்ரோ பரேடெஸ் ஸ்பெயின் வீரருடன் மோதலில் ஈடுபட்டார். அதனை ஸ்கலோனி தான் தடுத்து நிறுத்தினார். அதுபற்றிப் பேசுகையில், ”வெற்றியின் போது கண்ணியமாக இருந்தோம். அதே, கண்ணியம் தோல்வியிலும் இருக்கவேண்டும். இன்று நாங்கள் தோல்வியடைந்தோம். அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அதற்காக நாங்கள் வாழ்வதை நிறுத்தவோ அல்லது இந்த இடத்திற்கு எவ்வாறு வந்தோம் என்பதையோ மறக்கமாட்டோம்” என்றார்.
மேலும், “ரசிகர்கள், எனது வீரர்கள் மற்றும் நாட்டிற்கு நான் சொல்ல விரும்புவது நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி விளையாடினோம். ஒரு யதார்த்த சூழலை எதிர்கொண்டு நாங்கள் இங்கு வந்தோம். நமது வீரர்கள் இன்று செய்ததைப் போல தங்கள் முழுத் திறமையையும் களத்தில் மட்டுமே வெளிப்படுத்தினால், அது நம் மக்களுக்கும் நாட்டிற்கும் முன்னுதாரணமாக அமையும். வேறு வழியில்லை. நாங்கள் மீண்டும் எழுவோம்.
இரண்டாவது இடம்பிடித்ததை நான் மிகவும் மதிக்கிறேன். இங்கு வருவதற்கு பெரிய முயற்சி தேவைப்படுகிறது. அதற்கான அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.
நாங்கள் உண்மையில் வெற்றிபெற விரும்பினோம். ஆனால், இறுதியில் நான் நன்றியுணர்வுடன் இருக்க விரும்புகிறேன். இந்த சோகத்திலும் என்னிடம் உள்ள ஒரே வார்த்தை அதுதான். நீங்கள் நன்றாகவோ மோசமாகவோ விளையாடினாலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் அதில் குறை காண்பது கடினமே” என்றார்.
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நீடிப்பது குறித்து ஸ்கலோனி சந்தேகம் எழுப்பிய ஸ்கலோனி, டிசம்பரில் தனது ஒப்பந்தம் முடிவடையும்போது பதவி விலக வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.
ஆனால், 2030 உலகக் கோப்பை வரை தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
Summary
Argentina coach Lionel Scaloni stated that the Spanish team played exceptionally well.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்ஜென்டீனாவின் டிஎன்ஏவில் இருக்கும் 'கம்பேக்’... ஒலிம்பிக்ஸ் வெளியிட்ட விடியோ!

அரையிறுதியில் ஜெர்ஸியை மாற்றும் ஆர்ஜென்டீனா! பின்னணியில் ஒரு வரலாற்று காரணம்!








