ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 0 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை வென்றது.
ஆர்ஜென்டீனாவை கோல் அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடிய ஸ்பெயின் அணி ஒரு அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் பெரிதும் கவனிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரையும் மீறி ஒரு சிறுவன் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றான்.
ஸ்பெயின் நட்சத்திர வீரர் லாமின் யமாலின் 3 வயது குட்டித் தம்பியான கீன் யமால் தான் அது. இத்தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி விளையாடியப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வந்த கெய்னே, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வென்றதும் உலகக்கோப்பையுடன் எடுத்த புகைப்படங்கள் உலகெங்கும் வைரலாகியுள்ளது.
போட்டிகள் நடைபெறுகையில், மைதானத்தின் பர்வையாளர் வரிசையில் நின்று ‘வாமோஸ்’ எனக் கூச்சலிடும் கீன், அவ்வப்போது செய்யும் சேட்டைகள், வேடிக்கையான முகபாவனைகள், நாக்கை வெளியே நீட்டுவது என மைதானத்தின் பெரிய திரைகளில் அடிக்கடி இடம்பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
லமின் யமாலும் ஆட்டத்தின்போது அடிக்கடி மைதானத் திரைகளைப் பார்த்து, கீனுக்கு கையசைத்துச் சிரிப்பார்.

கீன் யமால்
ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீன் யமால் லாமின் யமாலைப் பார்க்க மைதானத்திற்குள் ஓடி வந்தார். பின்னர், மைதானத்தில் கால்பந்து விளையாடுவது, யமாலுடன் உலகக்கோப்பையை கையில் ஏந்தி போஸ் கொடுத்தது, பாதுகாப்பு காவலர்களிடம் தொப்பியை வாங்கி அணிந்தது என அவரது சேட்டைகள் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றன.

தாய் மற்றும் தம்பியுடன் லாமின் யமால்
லாமின் யமால் தனது தம்பியுடன் மிக நெருங்கிய பாசப் பிணைப்பைக் கொண்டுள்ளார். இதுபற்றி ஒருமுறைப் பேசுகையில், “எனது தம்பிதான் எனக்கு எல்லாம். அவன் எனக்கு ஒரு மகனைப் போல இருக்கிறான். அவனை நான் அளவின்றி நேசிக்கிறேன். என் தம்பி மகிழ்ச்சியாக இருப்பதையும், என் அம்மா அவர் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதையும் பார்ப்பதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வைரல் சகோதரர்களை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
உலகக்கோப்பையுடன் கீன் யமால்
Summary
Lamine Yamal's little brother has gone viral worldwide after holding the World Cup!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










