மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறை சாம்பியன்!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி 2-ஆவது முறையாக ஸ்பெயின் அணி உலகக் கோப்பையைத் தட்டித்தூக்கியுள்ளதைப் பற்றி...

News image

ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்! - படம்: எக்ஸ்.

Updated On :20 ஜூலை 2026, 3:40 am IST

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய கால்பந்துத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பையை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின.

23-வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பல முன்னணி அணிகள் எதிர்பாராத விதமாக லீக் சுற்றிலும் நாக்-அவுட்டிலும் வெளியேறின.

அதே நேரத்தில், அறிமுக அணிகளான கேப் வெர்டே போன்ற அணிகள் வலிமைமிக்க பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தன. இருமுறை சாம்பியனான உருகுவே லீக் சுற்றிலேயே வெளியேற, நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி 2-வது சுற்றிலும், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 3-வது சுற்றிலும் தொடரை விட்டு வெளியேறியது.

போட்டியின் தொடக்க விழாவில்...

போட்டியின் தொடக்க விழாவில்... - படம்: ஏபி.

அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் தனது 2 ஆவது உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொருபுறம், இங்கிலாந்தை தோற்கடித்த நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, 7-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் ஜாம்பவான் 39 வயதான மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை எனக் கருதப்பட்டதாலும், இளம் வீரர்கள் லாமின் யாமல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டதால் இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பட்டம் வெல்வதற்கான மோதலில் நான்காவது படத்தை வெல்லும் முனைப்பிலும், வெற்றியுடன் விடைபெற வேண்டும் முனைப்பில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் மெஸ்ஸியும், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஸ்பெயினும் மோதின.

1930-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உருகுவே மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் மோதியிருந்தன. அதன்பிறகு, தற்போது 96 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பானிஷ் மொழி பேசும் இரண்டு நாடுகள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பதால், எதிர்பார்ப்பு அதிகமானது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைஃப் கால்பந்து திடலில், பிஃபா இறுதிப் போட்டி திங்கள்கிழமை (20-ஆம் தேதி) அதிகாலை 12.30 தொடங்கியது. இருநாட்டு தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு, போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் - படம்: ஏபி.

இதில், சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சிறப்புரையாற்றினார். மேலும், போட்டியைக் காண நடிகர் மேட் டாமன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஸ்பெயின் ஜாம்பவான் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா ஃபிஃபா உலகக் கோப்பைக் கோப்பையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

பந்தைத் தடுத்த ஆர்ஜென்டீன கோல்கீப்பர் மார்டினஸ்.

பந்தைத் தடுத்த ஆர்ஜென்டீன கோல்கீப்பர் மார்டினஸ். - படம்: ஏபி.

ஆட்டம் தொடங்கியது முதலே நடப்பு சாம்பியன் அணியான ஆர்ஜென்டீனாவுக்கு ஸ்பெயின் அணி கடுமையான சவால் அளித்தது. போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் நட்சத்திரம் லாமின் யாமல் அடித்த ஷாட்டை ஆர்ஜென்டீன கோல்கீப்பர் மார்டினஸ் அட்டகாசமாகத் தடுத்தார்.

ஆட்டத்தின் முதல் 15 நிமிஷத்தில் 67 சதவிகிதம் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. இரு அணிகளும் கடுமையாக மோதினாலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் ஒரு கோல்கூட போட முடியவில்லை.

முதல் பாதியான 45 நிமிஷத்துடன் கூடுதலாக ஸ்டாபேஜ்க்காக 4 நிமிஷங்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் இரு அணிகளாலும் கோல்கள் போட முடியவில்லை. நடப்பு தொடரில் முதல் பாதியில் குறைவான ஷாட்டுகள் அடிக்கப்பட்ட ஆட்டமாகவும் இது அமைந்தது.

லாமின் யாமல்.

லாமின் யாமல். - படம்: ஏபி.

ஸ்பெயின் அணி மொத்தமாக 3 ஷாட்களை அடித்தது. லாமின் யாமல் மற்றும் மிக்கேல் ஓயர்சபல் ஆகியோர் தலா ஒரு ஷாட் அடித்தாலும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர் மார்டினஸ் சாதுர்யமாக பாய்ந்து அதனைத் தடுத்து அசத்தினார்.

லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் லாமின் யமாலுடன்...

லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் லாமின் யமாலுடன்... - படம்: ஏபி.

அதே வேளையில், முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஒரு ஷாட்கூட அடிக்கவில்லை. ஸ்பெயின் அணி 51 சதவிகிதமும், ஆர்ஜென்டீனா அணி 45 சதவிகிதமும் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

பிடிஎஸ் (BTS) குழுவினர்

பிடிஎஸ் (BTS) குழுவினர் - படம்: ஏபி.

முதல் பாதியின் இடைவேளையில், பிரபல பாடகர்கள் ஜஸ்டின் பைபர், ஷகீரா, பிடிஎஸ் (BTS) குழுவினர் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

ஷகீராவின் இசை நிகழ்ச்சி.

ஷகீராவின் இசை நிகழ்ச்சி. - படம்: ஏபி.

இரண்டாவது பாதி தொடங்கி, ஆட்டத்தின் 90-வது நிமிஷங்கள் வரையிலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90+2 ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீன வீரர் என்ஸோ ஃபெர்னாண்டஸ், ஸ்பெயின் வீரர் பாவ் குபார்சி மீது பலமாக மோத, இரண்டு மஞ்சள் அட்டையைப் பெற்ற ஃபெர்ணாண்டஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஆர்ஜென்டீன அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன்பின்னர், கிடைத்த வாய்ப்பிலும், கோல் போஸ்ட்டை நோக்கி லாமின் யாமல் அடித்த அட்டகாசமான ஷாட்டை மார்ட்டினஸ் அசாத்தியமாகப் பறந்து தடுத்தார். கூடுதல் நேரமான 95-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் அணி வீரர் நிக்கோ வில்லியம்ஸ் கோல் போட்டார். ஆனால், அந்த கோலை நடுவர் நிராகரித்து விட்டார்.

இளம் நட்சத்திரம் லாமின் யாமலை ஆரத்தழுவிய மெஸ்ஸி.

இளம் நட்சத்திரம் லாமின் யாமலை ஆரத்தழுவிய மெஸ்ஸி. - படம்: ஏபி.

அதைத்தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க, கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் 106-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் தனது தலையால் தட்டிக்கொடுத்த பந்தை, பெர்னாண்டோ டோரஸ் அசத்தலாக கோலாக மாற்றினார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் டோரஸ்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் டோரஸ்.

இதனால், ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மேலும், ஆதிக்கத்தைத் தொடர்ந்த ஸ்பெயின் அணி 108-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலையும் நடுவர் நிராகரித்தார்.

ஆட்டத்தின் 120 நிமிஷங்கள் முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கியது. இதன் மூலம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி தனது 2-வது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

சோகத்தில் மெஸ்ஸி.

சோகத்தில் மெஸ்ஸி. - படம்: ஏபி.

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகக் கருதப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் சூப்பரான தற்காப்பு ஆட்டத்தால் ஆர்ஜென்டீனாவால் ஒரு கோல்கூட போட முடியவில்லை. வெற்றிக் கோப்பையுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கனவு தகர்ந்தது. யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின், தற்போது உலகக் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.490 கோடியும் அதனுடன் தங்கப்பதக்கமும், 2ஆம் இடம் பிடித்த ஆர்ஜென்டீனா அணிக்கு ரூ.325 கோடியும் வெள்ளிப்பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

Summary

Spain 1-0 Argentina Live, FIFA World Cup Final 2026: Heartbreak for Messi as Spain win 2nd World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.