நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது பற்றி...

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 10:00 pm IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிகவின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10.00 மணியளவில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார், காவிரி நதிநீர் பிரச்னைக்கு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

The DMDK is set to stage a protest condemning the Karnataka government over the Mekedatu dam issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.