காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைச் செயல்படுத்தினால், தனது பதவியைத் துறக்கவும் தயார் என அமைச்சர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அவ்வாறு மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழக விவசாயிகளின் நீராதாரம் பாதிக்கப்படும் என்பதால், கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை செயல்திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக திருவள்ளூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் அளித்த பேட்டியில் "காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு செயல்படுத்தினால், பதவியைத் துறக்கவும் தயார்" என்று தெரிவித்தார்.

திருவள்ளூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைச்சர் ராஜேஷ் குமார்
மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம் என்று அமைச்சா் ஷாஜகானும், அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனும் உறுதியளித்துள்ளனர்.
Summary
Ready to resign if the Karnataka Congress government builds the Mekedatu dam, says Minister Rajesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்!
மேக்கேதாட்டு அணை! தமிழ் மண்ணின் உரிமையில் சமரசம் இல்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




