/

மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் பேசியது பற்றி...

News image

அமைச்சர் ராஜேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:19 am IST

மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை செய்தியாளருடன் அமைச்சர் ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) பேசியதாவது, "மேக்கேதாட்டு பிரச்னையைப் பொருத்தவரையில், தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கெனவே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமையாகும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியது. அதனைப் புறக்கணிக்க முடியாது. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அதன் தீர்ப்புகளைக் கூறியுள்ளது. ஆகையால், இதில் சட்ட மற்றும் நீதித் துறைரீதியாக ஏற்கெனவே விவரிக்கப்பட்டு விட்டது.

இதனை அரசியலில் ஒற்றுமை, மனிதநேயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்த புரிதலுடன் அணுகுதல் வேண்டும். இதில் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

Summary

Protecting the interests of Tamil Nadu's farmers remains our priority, says Minister S Rajesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.