புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியது பற்றி...

MK Stalin | Nirmal Kumar

மு.க. ஸ்டாலின் | நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் கடந்த ஒன்றரை மாதமாக பல கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறார். முதல்வர் தலைமையில் முடிவெடுப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேக்கேதாட்டு விவகாரத்தில் அனைத்தும் ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் அனைத்தையும் சரிசெய்வதில் முதல்வர் துரிதமாகச் செயல்படுவார். தமிழக மக்களுக்காக முதல்வர் 100 சதவிகிதம் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும்.

இது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை. இதில் தீர்வுகாண இரு வழிகள் உள்ளன. ஒன்று - நேரடியாகப் பேசுவது, மற்றொன்று - சட்டரீதியாகச் செயல்படுவது. இவை இரண்டையுமே முதல்வர் ஆய்வுசெய்து வருகிறார்.

இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையில் அதிகமாக பாதிக்கப்படுவது தமிழக விவசாயிகள்தான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என முதல்வர் ஆய்வுசெய்து வருகிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. உதயநிதியிடம் மேக்கேதாட்டில் என்ன பிரச்னை என்று கேளுங்கள்.

அவரின் தாத்தா (முன்னாள் முதல்வர் கருணாநிதி) 1970, 1971, 1974-ல் என்ன செய்தார் என உதயநிதியிடம் கேளுங்கள். 1998-ல் கருணாநிதியின் தலைமையில்தான் காவிரிநீர் மேலாண்மைக் குழு அமைப்பதற்கான முதற்கட்டக் குழு கூட்டம் நடந்தது. அதில் என்னென்ன முக்கியமான சரத்துகளையெல்லாம் அவர் நீக்கினார் என்பதைக் கேளுங்கள். அறிக்கை வெளியிடுவது மட்டுமே மு.க. ஸ்டாலினின் வேலை" என்று தெரிவித்தார்.

Summary

M.K. Stalin does not even know what Mekedatu is, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.