சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பெரம்பூர் தொகுதி: முதல்வர் விஜய்க்கு எதிராக 3 பேர் தேர்தல் வழக்கு

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று பேர் தேர்தல் வழக்கு தாக்கல்

CM Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று பேர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது.

இந்த நிலையில், தேர்தல் முடிந்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்குகளும் அடங்கும்.

முதல்வரும் தவெக தலைவருமான விஜய், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகிய மூவரும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வாக்காளர் சிவராஜ் என்பவரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ மருது கணேஷ் என்பவரும், திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் வெற்றிக்கு எதிராக வாக்காளர் பெரியசாமி உள்பட சுமார் 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Summary

Election casesfiled against the victory of CM Vijayand several other MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.