தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தன்னுடைய சொந்த தொகுதியான பெரம்பூர் செல்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார்.
பெரம்பூர் மக்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலியையும் முதல்வர் விஜய் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் உள்ள நியாய விலைக் கடைகளையும் முதல்வர் ஆய்வு செய்து, ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கட்சியாக வென்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
முதல்வரின் சொந்த தொகுதி என்பதால், பெரம்பூர் தொகுதிக்கு பல்வேறு முன்னெடுப்புப் பணிகள் தொடங்கின. இந்த நிலையில், பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை இன்று முதல்வர் விஜய் திறந்து வைக்கவிருக்கிறார்.
மேலும், பெரம்பூர் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கியும், தொகுதி மக்கள் பிரச்னையை தீர்க்க புதிய செயலியையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
மேலும் பெரம்பூர் தொகுதியில் பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பட்டாக்களை வழங்குகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்திருந்த முதல்வர் விஜய், அங்கு நேரில் சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சி நிர்வாகம், பல்வேறு அரசுப் பணிகள், கலந்தாலோசனைகள் என பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்த முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதிக்கு வராமல் இருந்தார்.
அதேவேளையில், பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்திலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இன்று தனது சொந்த தொகுதிக்கு முதல்முறையாக செல்லவிருக்கிறார்.
எங்கே இருக்கிறது எம்எல்ஏ அலுவலகம்?
பெரம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், சென்னை வியாசர்பாடி சரமா நகர் முதல் தெருவில் அமைந்துள்ளது. இது புதிதாகக் கட்டப்பட்டது அல்ல, ஏற்கனவே இருந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன்பகுதியில், பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ச. ஜோசப் விஜய் என்று இடம்பெற்றுள்ளது.
கட்டடம் முதலில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சுற்றுச் சுவர்கள் முழுமையாக அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, முதல்வர் விஜய்க்கு தனி அறையும் அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன், இன்று திறப்பு விழாவுக்காகத் தயாராக உள்ளது.
பெரம்பூர் தொகுதி மக்களிடமிருந்து குறைகளை நேரடியாகக் கேட்டறிய பணியாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
Summary
Chief Minister Vijay visits Perambur! MLA office inauguration!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









