FOLLOW US

ON GOOGLE DISCOVER

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 405 குறைகள் தீர்க்கப்பட்டன!

முதல்வர் விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதியில் தொடங்கிய குறைதீர் இணையதளத்தில் பதிவான புகார்களில் இதுவரை 405 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

News image

குறைதீர் இணையதளம்... - PC: tvkcm.com/transparency

Updated On :20 ஜூலை 2026, 9:52 pm IST

முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதியில் தொடங்கிய குறைதீர் இணையதளத்தில் பதிவான புகார்களில் இதுவரை 405 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் வரை எந்தவொரு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த இணையதளம் காட்டிய நிலையில், தரவுகள் பதிவேற்றத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததாகவும், அந்தக் கோளாறு சரி செய்யப்பட்டதால், தற்போது சரியான தரவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சி. ஜோசப் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதிக்கு கடந்த வாரம் ஜூலை 13 ஆம் தேதி சென்றிருந்தார்.

அங்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, மக்கள் குறைகளை அறிந்து உடனடியாக தீர்வு காண்பதற்காக உங்கள் உரிமையை பதிவு செய்யுங்கள் என குறைதீர் இணையதளப் பக்கத்தையும் (tvkcm.com/transparency) தொடங்கியிருந்தார்.

அந்த இணையதளப் பக்கத்தில் ஜூலை 20 ஆம் தேதி பகல் 1 மணி நிலவரப்படி, பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டுள்ள 792 புகார்களில் ஒன்றின் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், இணையதளப் பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்ததால், தீர்க்கப்பட்ட குறைகளின் தரவுகள் பதிவாகவில்லை என்றும் தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் தவெக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளப் பக்கத்தில், ஜூலை 20 இரவு 9.45 மணி நிலவரப்படி 803 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், 405 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

குறிப்பாக மின்வெட்டு புகார், தெருவிளக்கு புகார், மழைநீர் புகார், தீ பாதுகாப்பு புகார்களுக்கு 100% தீர்வு காணப்பட்டுள்ளதாக அந்த இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

405 grievances were resolved in Chief Minister Vijay's Perambur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.