ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

2010 உலகக் கோப்பை லெஜண்டரி இனியெஸ்டாவை ஞாபகப்படுத்தும் டேனி ஓல்மோ!

ஸ்பெயின் அணியின் இளம் வீரர் டேனி ஓல்மோ 2010 இனியெஸ்டாவை போலவே விளையாடியது குறித்து...

News image

இனியெஸ்டா, டேனி ஓல்மாவின் புகைப்படங்கள். - படங்கள்: எக்ஸ் / டேனி ஓல்மோ, alimo_philip.

Updated On :15 ஜூலை 2026, 4:30 pm IST

ஸ்பெயின் அணியின் இளம் வீரர் டேனி ஓல்மோ (28 வயது) 2010 உலகக் கோப்பையில் பல வீரர்களுக்கு மத்தியில் தனியாளாக விளையாடிய இனியெஸ்டாவை போலவே விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2010ல் உலகக் கோப்பையை வெல்லும்போது ஸ்பெயின் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

டேனி ஓல்மோ அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடுகிறார். இந்த உலகக் கோப்பையில் இரண்டு அசிஸ்ட், ஒரு கோல் அடித்துள்ளார். அதிலும் ஒரு அசிஸ்ட் அரையிறுதிப் போட்டியில் வந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் உடனான அரையிறுதிப் போட்டியில் நான்கு வீரர்களுக்கு மத்தியில் டேனி ஓல்மோ இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால், 2010 உலகக் கோப்பையில் இனியெஸ்டாவும் இதேபோல் விளையாடி இருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இனியெஸ்டா (42 வயது) 2010ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தார். அவரும் மிட்ஃபீல்டர். 2010ல் இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது புகைப்படம் மிகவும் புகழ்பெற்றது.

இந்த இனியெஸ்டாவின் தருணத்தைத்தான் மீண்டும் டேனி ஓல்மோ நினைவூட்டியிருக்கிறார். சமூக வலைதளத்தில் ஸ்பெயின் அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Summary

Dani Olmo evokes memories of the legendary Iniesta from the 2010 World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.