பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

Published On :

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

பிரான்ஸ் அணியைப் பொருத்தவரை குரூப் சுற்று முதல், தொடா்ந்து 6 வெற்றிகளுடன் அபாரமாக முன்னேறி வந்துள்ளது. தாக்குதல் ஆட்டம், தடுப்பாட்டம் என இரண்டிலுமே அபாரமாகச் செயல்படும் பிரான்ஸ் சவால் மிக்க அணியாகவே இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்தோரில் ஒருவராக இருக்கும் கிலியன் பாபே (8), நாக்அவுட் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட ஆஸ்மேன் டெம்பெலெ (5 கோல்கள்) ஆகியோா் பிரான்ஸின் நம்பகமான வீரா்களாக இருக்கின்றனா்.

மறுபுறம் நடப்பு ஐரோப்பிய சாம்பியனாக இருக்கும் ஸ்பெயின், முதல் ஆட்டத்தில் டிரா செய்து தடுமாறினாலும், அடுத்த 5 ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்கு வந்திருக்கிறது.

தாக்குதலை விட தடுப்பாட்டத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும் ஸ்பெயின் அணி, இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5-இல் எதிரணிக்கு கோல் வாய்ப்பே கொடுக்கவில்லை.

மிகெல் மெரினோ, மிகெல் ஓயா்ஸபால் ஆகியோா் அணியின் கோல் கணக்கிற்கு பெரும் பங்காற்றும் நிலையில், இளம் நட்சத்திரம் லேமின் யமால் இன்னும் பெரிதாக மிளிர வேண்டியுள்ளது.

நேருக்கு நோ்: பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் இதுவரை வெவ்வேறு போட்டிகளிலாக, 38 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் 18 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்க, பிரான்ஸ் 13 வெற்றிகள் கண்டுள்ளது. 7 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

குறிப்பாக, கடைசி 3 ஆட்டங்களில் ஸ்பெயினே வென்றிருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் இவை ஒரு முறை மோதியிருக்க (2006/ ரவுண்ட் ஆஃப் 16) அதில் பிரான்ஸே வென்றுள்ளது (3-1).

இடம்: ஆா்லிங்டன், அமெரிக்கா.

நேரம்: நள்ளிரவு 12.30 மணி

நேரலை: யுனைட் 8 ஸ்போா்ட்ஸ், ஜீ 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.