இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டுச்செல் (52 வயது) உலகக் கோப்பையின் அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு ஐஸ்கிரீம் போதுமெனக் கூறியுள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இன்றிரவு 12.30 மணிக்கு நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் மோதவிருக்கிறது.
கடைசியாக இங்கிலாந்து அணி 1966ல் உலகக் கோப்பையை வென்றிருந்தது. தற்போது, 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், அணியின் பயிற்சியாளர் இது குறித்து பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகக் கோப்பையில் அழுத்தத்தைச் சமாளிப்பது எளிது. ஒரு பைக், பார்க்கிங் செய்ய போதுமான இடம் அத்துடன் ஒரு ஐஸ்கிரீம் போதுமானது.
சில நேரங்களில் பைக்கில் சென்று, பார்க்கிங்கில் வண்டையை நிறுத்திவிட்டு, அதில் உட்கார்ந்து 15 நிமிஷங்கள் கையில் ஐஸ்கிரீம் உடன் இருந்தால் நீங்களும் 15 வயது சிறுவனாக மாறலாம்.
வெதுவெதுப்பான மாலை நேரத்தை மகிழ்ச்சியுடன் 15 நிமிஷங்கள் ஐஸ்கிரீம் இருந்தால், அதுவே நம்மை மீட்டெடுக்கும். நமக்கு உள்ளிருக்கும் இந்த உணர்வுதான் சில நேரங்களில் நாம் அனைவருக்கும் தேவைப்படுகிறது என்றார்.
60 ஆண்டு கோப்பைக் கனவு நிறைவேறுமா எனக் கேட்டதற்கு, தாமஸ் டுச்செல், “எனக்கு அந்தச் சுமை கிடையாது. நீங்கள் பதற்றமாக உணர்ந்தால் நானும் பதற்றமடைவேன். அது இயல்பானதுதான். ஆனால், எனக்கு எந்தச் சுமையும் கிடையாது” என்றார்.
Summary
England coach Thomas Tuchel has a recipe for handling World Cup stress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூட் பெல்லிங்கம் இரு கோல்கள்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!
உலகக் கோப்பை தோல்வி! குரோஷிய அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா!

மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!








