தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

News image

இங்கிலாந்து அணிக்கு கோல்கள் அடித்து வெற்றியை உறுதிப்படுத்திய ஜூட் பெல்லிங்ஹாம் (2), ஹாரி கேன் (1). - AP

Updated On :6 ஜூலை 2026, 4:38 pm IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் விளையாடும் சுற்று நடைபெற்று வருகின்றது. இதில், மெக்ஸிகோ மைதானத்தில் மெக்ஸிகோ - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

கடுமையான இடி, மழை காரணமான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மெக்ஸிகோ உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் விளையாடியது. ஆனால், இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் கூட்டத்தை அமைதியாக்கினார்.

பெல்லிங்ஹாம் 36-வது நிமிடத்தில் புகாயோ சாகா வழங்கிய கிராஸை துல்லியமாகத் தலையால் முட்டி கோலாக்கினார். அதேவேகத்தில், 38-வது நிமிடத்தில் மெக்ஸிகோவின் தவறான பாஸை வாங்கிய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன், பெல்லிங்ஹாமிற்கு அதனை பாஸ் செய்ய அவர் நிதானமாக அதை கோலாக மாற்றினார்.

ஆட்டம் இங்கிலாந்து வசம் செல்வதை மாற்றிய மெக்ஸிகோ வீரர் ஜூலியன் குவினோன்ஸ் மிக அருகிலிருந்து அடித்த பந்து மெக்ஸிகோவின் முதல் கோலாக மாறியது. இடைவேளைக்கு முன்பு, ஆட்டம் 2-1 என்ற கணக்கில் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் ஒரு த்ரில்லராக மாறியது.

54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜாரெல் குவான்சா எதிரணி வீரர் ஜீசஸ் கல்லார்டோ மீது காலணியின் அடிப்பாகத்தால் மோதியது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. இதனால், இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்து.

ஆனால், உடனடியாக 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்தின் ஹாரி கேன் இந்தத் தொடரில் தனது 6-வது கோலைப் பதிவு செய்தார்.

பின்னர், 69-வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் பிரையன் குட்டிரெஸ் மீது கேன் ஃபவுல் செய்ததாகக் கூறி பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை, மெக்ஸிகோ வீரர் ரவுல் ஜிமெனெஸ் கோலாக்கினார்.

ஆட்டத்தின் இறுதிவரை மெக்ஸிகோ வீரர்கள் தீவிரமாக கோல் அடிக்கத் தொடர்ந்து முயன்றனர். ஆனால், இங்கிலாந்து தொடர்ந்து சமாளித்து தனது வெற்றியை உறுதி செய்தது.

இரு அணிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

அடுத்ததாக, ஜூன் 11 அன்று காலிறுதியில் நார்வே அணியுடன் இங்கிலாந்து மோதவுள்ளது.

Summary

England advances to the quarter-finals after defeating Mexico!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.