தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

பிரேசிலை வீழ்த்தியது நார்வே! புதிய வரலாறு படைத்த ஹாலண்ட்!

பிரேசிலை வீழ்த்திய நார்வே அணி முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

News image

நார்வே வெற்றியைக் கொண்டாடிய எர்லிங் ஹாலண்ட் - AP

Updated On :6 ஜூலை 2026, 1:59 pm IST

பிரேசிலைத் தோற்கடித்த நார்வே அணி முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை கால்பந்தில் காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் விளையாடும் சுற்று நடைபெற்று வருகின்றது. இதில், நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் பிரேசில் - நார்வே அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

5 உலகக்கோப்பைகளை வென்று கால்பந்து உலகின் ஜாம்பவானாகத் திகழும் பிரேசில் அணியை, 3-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்கும் நார்வே எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியை பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. 14வது நிமிடத்தில் நார்வே வீரர் கிறிஸ்டோஃபர் அஜர் பொன்னான பெனால்டி வாய்ப்பை பிரேசிலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

பிரேசில் வீரர் புருனோ குய்மரேஸ் அடித்த பந்தை நார்வே கோல்கீப்பர் ஓர்ஜன் நைலேண்ட் சரியாகக் கணித்து பாய்ந்து தடுத்தார். அதேபோல தொடர்ந்து கேப்ரியல் மார்டினெல்லி, வினிசியஸ் ஜூனியர் மற்றும் எண்ட்ரிக் ஆகியோர் கோல் அடிக்க முயன்ற அனைத்து பந்துகளையும் அபாரமாகத் தடுத்து பிரேசிலைத் தடுமாறச் செய்தார்.

இரு அணிகளும் கடுமையாகப் போராடிய நிலையில் இரண்டாம் பாதி நார்வே அணியின் பக்கம் சென்றது. 67-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு வலுசேர்க்கும் விதமாக மாற்று வீரராக நெய்மர் களத்தில் இறங்கினார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் மாற்று வீரராக் களமிறங்கிய ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் இடதுபுறத்திலிருந்து வழங்கிய கச்சிதமான கிராஸை எர்லிங் ஹாலண்ட் தனது வழக்கமான பாணியால் தலையால் முட்டி கோலாக்கினார்.

அதேபோல, ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் மீண்டும் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப், ஹாலண்டுடன் இணைந்து செயல்பட பிரேசில் வீரர் டானிலோவின் கால்களைக் கடந்து நேராக ஹாலண்ட் அடித்த பந்து துல்லியமான கோலாக மாறியது. நார்வேயின் வெற்றியை உறுதிசெய்து வரலாற்றில் இடம்பிடித்தார் ஹாலண்ட்.

பின்னர் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய நெய்மர், பிரேசில் அணிக்கு ஒரு ஆறுதல் கோலை அடித்தார்.

உலக சாம்பியன் அணியான பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வென்ற நார்வே அணி காலிறுதிக்கு முதல்முறையாகத் தகுதிபெற்றது.

நார்வே வீரர் ஹாலண்ட், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அந்நாட்டுக்குப் பரிசளித்துள்ளார். இந்தத் தொடரில் மட்டும் ஹாலண்ட் 7 கோல்கள் அடித்து மெஸ்ஸி, எம்பாப்பே போன்ற நட்சத்திர வீரர்களுடன் கோல் கணக்கை சமன் செய்துள்ளார்.

அடுத்ததாகக் காலிறுதியில் இங்கிலாந்து அணியை நார்வே எதிர்கொள்கிறது.

Summary

Norway defeats Brazil! Haaland creates new history!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.