டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணி குறித்து...

News image

போட்டிக்குப் பிறகு நெய்மர். - படம்: ஏபி

Updated On :25 ஜூன் 2026, 2:49 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி ஸ்காட்லாந்தை 3-0 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாம் பாதியில் நெய்மர் ஜூனியர் களமிறங்கி விளையாடினார்.

அமெரிக்காவின் மியாமி திடலில், இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 7, 45+3ஆவது நிமிஷங்களில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் 2-0 என பிரேசில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மேத்திவ்ஸ் குன்ஹா 60ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர், குன்ஹா வெளியேற அவருக்குப் பதிலாக 76ஆவது நிமிஷத்தில் நெய்மர் களமிறங்கினார்.

நெய்மர் கோல் அடிக்காவிட்டாலும் சில வாய்ப்புகளை உருவாக்கினார். போட்டிக்குப் பிறகு கண்ணீர் விட்ட நெய்மர் சமூக வலைதளங்களில் வைரலானார்.

பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த நெய்மர் இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடினார். நாக் அவுட் சுற்றுப் போட்டியில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருக்குமென பயிற்சியாளர் நம்புவதாகக் கூறியுள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளில் பல அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட நெய்மர் சன்டோஷ் கிளப்பில் நன்றாக விளையாடி மீண்டும் பிரேசில் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Summary

Neymar makes first appearance in World Cup as second-half sub for Brazil against Scotland

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.