பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

காலிறுதிக்கு முன்னேற உதவிய நெய்மர்: எதிரணியின் சீண்டலுக்கு நடனமாடி பதிலடி!

கோபா டோ பிரேசில் காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் எதிரணியிடம் நடனமாடிய நெய்மரின் விடியோ குறித்து...

News image

நெய்மர் (கோப்புப் படம்) - AFP

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:30 pm IST

கோபா டோ பிரேசில் ரவுண்ட் ஆஃப் 16 இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நெய்மரின் அசிஸ்ட்டால் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஓய்வறைக்குச் செல்லும் வழியில் எதிரணியினர் கூச்சலிடவே அவர்களைப் பார்த்து கோபமாக கத்திய நெய்மர், நடனமாடியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர் தனது கடைசி உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.

கோபா டோ பிரேசில் ரவுண்ட் ஆஃப் 16 முதல் கட்ட ஆட்டத்தில் ரெமோ உடன் 0-0 என சமனில் முடிந்தது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 1-0 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 74ஆவது நிமிஷத்தில் நெய்மரின் அசிஸ்ட்டினால் ரோனி கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்கள். இந்த வெற்றியினால் சன்டோஷ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஓய்வறைக்குச் செல்லும் வழியில் எதிரணியினர் நெய்மரைப் பார்த்து ஆபாச சைகையும் கூச்சலிடவும் நெய்மர் அதற்கு அவர்களைப் பார்த்து கோபமாக கத்தினார். பின்னர், “வெளியேறி விட்டீர்களே, வெளியேறி விட்டீர்களே” என ஜாலியாக நடனமாடியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Summary

Viral video: Dancing Neymar sparks CHAOTIC scenes as Santos star mocks rivals after Copa do Brasil victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.