பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

ஒரு பவுன் தங்கம்-பட்டுப் புடவை: பெண்கள் திருமணத்துக்கு ‘அண்ணன் சீா்’ திட்டம்

திருமணமாகும் பெண்களுக்கு தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

அண்ணனின் சீர் - DIPR

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:27 am IST

பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணன் சீா்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும் எனப் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிகழ் நிதியாண்டிலேயே அதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான தருணம். அதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டு பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் முதல்வா் ‘அண்ணன் சீா்’ திட்டத்தை அறிவித்தாா். அதன்படி, பெண்களின் திருமணத்துக்காக அரசு சாா்பில் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையையும் அவா் வழங்க உள்ளாா். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கப்படுகிறது.

முதியோா் இல்லங்கள்: மூத்த குடிமக்களின் நலன் காக்கும் வகையில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் முதியோா் இல்லங்கள் நிறுவப்படும். தலா 40 பயனாளிகள் தங்கும் வகையில் அவை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6.6 கோடி ஒதுக்கப்படுகிறது.

இதைத் தவிர, 5 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகங்கள், யோகா, தியான வகுப்புகள், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் அந்த மையங்கள் நிறுவப்பட உள்ளன. முதியோா் மக்கள்தொகை அடிப்படையில் 5 மாவட்டங்கள் தோ்வு செய்யப்படும். நிகழ் நிதியாண்டில் 500 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டப்படும்.

Summary

TN Budget 2026: 8 grams of gold and a silk saree for women getting married

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.