2026 -27 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று 2026- 27 ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9,818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான திட்டங்கள்:
மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு.
விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.
இதற்காக ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாய் கேர்
கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் இங்கு தங்கியிருந்து பயன் பெறலாம்.
கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
இதற்காக மொத்தம் ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணனின் சீர்
பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் & ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் & மாற்றுத்திறனாளிகள் என 30,000 பயனாளிகள் பயன்பெறுவர்.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்
பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.
இதற்காக ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப். 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இதற்காக ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேரவையில் அமைச்சர் தெரிவித்தார்.
Summary
TamilNadu Budget 2026: women schemes announced in tn budget
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட் 2026! இளைஞர்களுக்கு மின்வாகன பராமரிப்பு பயிற்சி; செயற்கை நுண்ணறிவு பயிற்சி!

தமிழ்நாடு பட்ஜெட்! ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

பட்ஜெட் 2026! இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு பட்ஜெட் 2026: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! - அமைச்சர் முக்கிய தகவல்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



