சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 5) சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்த நிலையில் நேற்று (செவ்வாய்) சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.13,360 -க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,06,880 -க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஜூலை 29 அன்று தங்கம் விலை சவரன் ரூ. 1,05,240 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
வெள்ளி விலை 6 நாள்கள் மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ. 5,000 உயர்ந்துள்ளது.
கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Gold and Silver today price in Chennai aug 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று தங்கம் வாங்கலாமா? ஆக. 4 விலை நிலவரம்!

ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி? (ஆக. 3)

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஆகஸ்ட் 1 நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? ஜூலை 15 நிலவரம்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



