ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்!

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு அறிவித்திருப்பது தொடர்பான செய்தி....

Neymar retires from international football after Brazil's World Cup exit vs Norway

நெய்மர்

Published On :6 ஜூலை 2026, 3:03 pm IST

பிரேசி நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 16 அணிகளுக்கான சுற்றில் பிரேசில் - நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்த பிரேசில் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இதைத்தொடர்ந்து பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்(34) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நார்வேயிடம் தோல்வியுற்ற பிரேசில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை கண்ணீருடன் அறிவித்துள்ளார்.

“நான் முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேதான் தொடங்கினேன், இங்கேயே முடித்தேன்” என ஓய்வு குறித்து உருக்கமாக அவர் பேசியுள்ளார். 2010ஆம் ஆண்டு பிரேசில் அணிக்காக அறிமுகமான நெய்மர் 129 போட்டிகளில் 80 கோல்கள் அடித்துள்ளார்.

அவரின் இந்த திடீர் ஓய்வு முடிவு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் நெய்மர் பெனால்டி கிக் மூலம் பிரேசில் அணிக்கு கோல் பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

FIFA World Cup: Neymar has retired from international football after Brazil's shock Round of 16 exit to Norway at the World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.