ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!

கால்பந்து உலகக் கோப்பை 2026ல் முதல்முறையாக விளையாடவிருக்கும் நெய்மர் குறித்து...

Brazil's Neymar (10) looks on before the World Cup Group C soccer match between Brazil and Morocco in East Rutherford, N.J., near New York, Saturday, June 13, 2026. (AP Photo/Yuki Iwanmura)

மொராக்கோ போட்டியின்போது நெய்மர். - படம்: ஏபி

Published On :24 ஜூன் 2026, 5:26 pm IST

பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் கால்பந்து உலகக் கோப்பை 2026ல் முதல்முறையாக பங்கேற்கவிருப்பதை அந்த அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

இதில் பிரேசில் குரூப் சி பிரிவில் இருக்கின்றன. முதல் போட்டியில் மொராக்கோ உடன் டிரா செய்த பிரேசில் தனது இரண்டாவது போட்டியில் ஹைதி உடன் வெற்றியைச் சுவைத்தது.

இந்த நிலையில், நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரேசில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மர் இந்தப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி கூறியிருப்பதாவது: உலகக் கோப்பையில் பங்கேற்க, நெய்மர் 100 சதவிகிதம் தகுதியாக இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சி எடுத்து நலமுடன் இருக்கிறார். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் (79) அடித்தவராக நெய்மர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 13 உலகக் கோப்பைப் போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

Summary

OFFICIAL: Brazil Neymar Jr day at the World Cup, he can play and 100% available.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.