உயிருள்ள சிலையாகப் (living statue) புகழ்பெற்ற காங்கோ ரசிகர் முதல்முறையாக உலகக் கோப்பையை நேரில் பார்க்க அனுமதி கிடைத்தது. முதலில் விசா கிடைக்காமல் இருந்த இவருக்கு தற்போது அனுமதி கிடைத்தது பேசுபொருளாகியுள்ளது.
மிஷேல் கூகா எம்போலடிங்கா (49 வயது) என்ற் இவர் காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருக்கிறார். கால்பந்து போட்டியின்போது அந்த நாட்டின் முதல் பிரதமரின் (பாட்ரிக் லுமும்பா) சிலை பாணியில் 90 நிமிஷமும் அசையாமல் இருந்து பிரபலமானார்.
இந்தக் காரணத்தினால், எம்போலடிங்காவுக்கு ’லுமும்பா வே’ என்ற பட்டப்பெயரையும் காங்கோ கால்பந்து ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.
காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியது. முதல் போட்டியில் போர்ச்சுகல் உடன் 1-1 என சமன்படுத்தியது.
இரண்டாவது போட்டியில் கொலம்பியாவுடன் 1-0 என தோல்வியுற்றது. இந்தப் போட்டியைப் பார்க்க லுமும்பா வே அமெரிக்க கால்பந்துத் திடலுக்கு வந்திருந்தார்.
இந்தமுறை மஞ்சள் நிற ஷர்ட், நீல நிற பேண்ட் உடன் சிகப்பு நிற கோட் அணிந்திருந்தார். போட்டி தொடங்கியதும் ஆடாமல் அசையாமல் தனது வலது கையை உயர்த்திப் பிடித்து நின்றார்.

லுமும்பா வே கொலை செய்யப்பட்டதைக் காட்டும் காங்கோ ரசிகர். - படம்: ஏபி
இவரிடம் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க முயன்றபோது உலகக் கோப்பையில் பார்வையிட்டது மகிழ்ச்சி என சிரித்து கடந்துவிட்டார்.
காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. இதற்காக அந்த நாட்டில் (ஏப்.1) பொது விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலரான பாட்ரிக் லுமும்பா வே பெல்ஜியத்தின் காலனிய ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து 196ல் காங்கோ சுதந்திரம் அடைய உதவினார். பின்னர், முதல் பிரதமராகப் பதவி வகித்தார். இருந்தும் ஓராண்டில் இவர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Congo fan who stands as living statue of independence leader Lumumba makes it to World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி..! மொராக்கோ த்ரில் வெற்றி!

சோபிக்காத ரொனால்டோ: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ!

எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




