12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!

காங்கோ கால்பந்து அணியின் ரசிகர் குறித்து...

FILE - Michel Nkuka Mboladinga, a DR Congo fan impersonating late Congolese leader Patrice Lumumba, strikes a pose during the Africa Cup of Nations group D soccer match between Botswana and DR Congo in Rabat, Morocco, Tuesday, Dec. 30, 2025. (AP Photo/Mosa'ab Elshamy, File)

அசையாமல் நிற்கும் காங்கோ கால்பந்து அணியின் ரசிகர். - படம்: ஏபி

Published On :

காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. இதற்காக அந்த நாட்டில் ஏப்.1ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மிஷேல் கூகா எம்போலடிங்கா (49 வயது) என்பவர் காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருக்கிறார். கால்பந்து போட்டியின்போது அந்த நாட்டின் முதல் பிரதமரின் (பாட்ரிக் லுமும்பா) சிலை பாணியில் 90 நிமிஷமும் அசையாமல் இருந்து பிரபலமானார்.

இந்தக் காரணத்தினால், எம்போலடிங்காவுக்கு ’லுமும்பா வே’ என்ற பட்டப்பெயரையும் காங்கோ கால்பந்து ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

காங்கோ அணி உலகக் கோப்பையில் போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. இந்தப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோவிலும் நடைபெற இருக்கின்றன. இவருக்கு விசா வழங்கப்படாதது பேசுபொருளானது.

தற்போது, காங்கோ அணியின் வீரர்கள் அனைவரும் லுமும்பா வேவும் எங்களுடன் கால்பந்து உலகக் கோப்பைக்கு வரவேண்டுமென அதிபரிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

’லுமும்பா வே’ காங்கோ அணியின் சின்னமாக பலரும் பார்க்கிறார்கள். காங்கோ நாட்டின் ஒற்றுமை, ஆர்வத்தை குறிப்பதாக அவர் பார்க்கப்படுகிறார்.

Summary

RD Congo players ask icon "Lumumba" to accompany the team to the World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.