
சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!
கால்பந்து உலகக் கோப்பைக்காக வெளியான பாடல் குறித்து...

கால்பந்து உலகக் கோப்பைக்காக உருவான பாடல் வெளியீட்டு போஸ்டர். - படம்: எக்ஸ் / சஹீரா.
கால்பந்து உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வமான பாடல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.
பிரபல கொலம்பிய பாடகியும் நடன கலைஞருமான சஹீரா, நைஜீரிய பாடகர் புர்னா பாய் உடன் இணைந்து, “டாய் டாய்” என்ற இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
முன்னதாக, சஹீரா 2010ல் நடனமாடிய வாக்கா வாக்கா பாடல் உலகம் முழுவதும் புகழ்ப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள பாடல் குறித்து ஃபிஃபா, “டாய் டாய் பாடல் சஹீரா, புர்னா பாய் உடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள சப்தங்களையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து கால்பந்து, கலாசாரம், ஒற்றுமையை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு ராயல்டி மூலம் கிடைக்கும் தொகை ஃபிஃபா குளோபல் சிட்டிசன் எஜுகேசன் ஃபண்டுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஜூலை 19ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் நடைபெறும் போட்டியின் பாதி நேரத்தில் மடோனா, சஹீரா, பிடிஎஸ் குழுவினர் இசைக்கச்சேரி நடப்பதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
Dai Dai is here. The @FIFAWorldCup 2026 starts now! @burnaboy https://t.co/PCKpgPcmWe pic.twitter.com/TfVS7mX9z6
— Shakira (@shakira) May 15, 2026
Summary
The World Cup has an official song with Shakira and Burna Boy combining for 'Dai Dai'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




