குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழா குறித்து...

Football World Cup, Actress Nora Fatehi.

கால்பந்து உலகக் கோப்பை, நடிகை நோரா ஃபடேகி. - படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :10 ஜூன் 2026, 5:02 pm IST

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் பாகுபலி பட நடிகை நோரா ஃபடேகி நடனமாடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 48 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பைக்கான தொடக்க விழா நிகழ்ச்சி கனடாவில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் மைக்கேல் பபுள், அலனிஷ் மொரிஸ்செட்டே, அலீஷா கேரா, எலீயானா, ஜெஸ்ஸி ரீயிஸ், சஞ்ஜோய், வேகாட்ரீம், வில்லியம் ப்ரின்ஸ் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்வு கனடாவில் டொரன்டோ பிஎம்ஓ ஃபீல்டு பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்திய படங்களில் நடித்த பாடகியும் நடிகையுமான நோரா ஃபடேகியும் பங்கேற்கிறார்.

நோரா ஃபடேகி டெம்பர், பாகுபலி 1 (மனோகரி பாடல்), கிக் 2 ஆகிய படங்களில் நடனமாடியுள்ளார். தமிழில் தோழா படத்தில் நடனமாடியுள்ளார். தற்போது காஞ்சனா 4 படத்திலும் இருக்கிறார்.

முன்னதாக 2022 கால்பந்து உலகக் கோப்பையின் இறுதி விழாவில் நடனமாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Nora Fatehi to perform at opening ceremony of FIFA World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.